மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

ராஜேந்திரபாலாஜி: அமைச்சர்தான், ஆனால் அமைச்சர் இல்லை!

ராஜேந்திரபாலாஜி: அமைச்சர்தான், ஆனால் அமைச்சர் இல்லை!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விரைவில் விடுவிக்கப்படலாம் என்று மின்னம்பலம். காம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகள் அந்தத் திசையிலேயே செல்கின்றன.

”கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்... அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வகைகளில் அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான ஆவின் பால் விநியோகம் குறித்தும் அதில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்தும் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி எந்த வகை அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆய்வும் நடத்தவில்லை. முதல்வர் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் பற்றி துறை அமைச்சர்களுடன் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னையில் இருந்த போதும் அழைக்கப்படவில்லை.

அதேபோல ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் பால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அறிவித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளிவராமல் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என ஆவின் நிர்வாகத்தில் இருந்து அறிவிப்பு வெளிவந்தது.

சாதாரண காலத்திலேயே பேட்டிகளுக்கும் பிரஸ்மீட்டுகளுக்கும் பெயர் பெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது முக்கியமான காலகட்டத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார். ஆவின் தொடர்பான அறிவிப்பை அதற்குரிய அமைச்சர் வெளியிட்டால் மக்களிடம் எளிதில் சென்றடையும் என்ற நிலையிலும்.... அமைச்சர் மூலம் அறிவிப்பு வெளியிடப் படாமல் ஆவின் நிர்வாகமே அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயல்பாடுகள் வரம்புக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

பல்வேறு புகார்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராஜேந்திரபாலாஜி மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான அதிருப்தியில் உள்ள நிலையில் அந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது மேற்கண்ட நடவடிக்கைகள்.

எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சர்தான், ஆனால் அமைச்சர் இல்லை என்ற நிலையே தற்போது நிலவுவதாக கூறுகிறார்கள் பால்வளத் துறை அதிகாரிகளே.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வியாழன் 26 மா 2020