மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

சரியான நடவடிக்கையின் முதல் படி: ராகுல் வரவேற்பு!

சரியான நடவடிக்கையின் முதல் படி:  ராகுல் வரவேற்பு!

மத்திய அரசின் நிவாரண அறிவிப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக அன்றாடப் பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என பலருடைய வாழ்க்கைச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு ஏழை மக்களுக்கு பொருளாதார சலுகைகள் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஏழை மக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் நிதித் தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரியிருந்தார். இந்த நிலையில் ஊரடங்கு நிவாரணமாக 1.7 லட்சம் கோடி மதிப்பிலான தொகுப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மார்ச் 26) அறிவித்தார். அதன்படி விவசாயிகளுக்கு உடனடியாக தலா ரூ.2,000, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,000, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைப் பெண்களுக்கு தலா ரூ.1,000, உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர் என பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதற்கு வரவேற்பு தெரிவித்த ராகுல் காந்தி, “ஏழை மக்களுக்கான நிவாரணமாக அரசு இன்று நிதித் தொகுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இது சரியான திசையில் செல்லும் முதல் நடவடிக்கையாகும். இந்த ஊரடங்கு உத்தரவால் முதியவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், கூலித்தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியோர் பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக இந்தியா கடன்பட்டிருக்கிறது” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 கோடி ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாடும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்” என்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வியாழன் 26 மா 2020