tபாதுகாப்பு வேண்டாம்: காவல் துறையிடம் ரஜினி

politics

தனது வீட்டுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜனவரி மாதம் நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதா ஆகிய இந்துக் கடவுளர்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடித்ததாக தெரிவித்தார். இதற்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ரஜினிகாந்த் வீட்டை நோக்கி முற்றுகை ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக தமிழக அரசின் சார்பில் ரஜினி வீட்டுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினிகாந்தை இன்று (பிப்ரவரி 29) அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

உதவி ஆணையரிடம், தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்றும் அதனை விலக்கிக் கொள்ளுமாறும் வலியுறுத்தியிருக்கிறார் ரஜினி. டிஜிபியுடன் இதுகுறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கிறோம் என அவரிடம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். ரஜினியின் கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு நாட்களில் அவரது வீட்டுக்கான பாதுகாப்பு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *