hஆறுமுகசாமி ஆணையம்: அவகாசம் நீட்டிப்பு!

politics

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது. 2017 நவம்பர் 22ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையைத் தொடங்கி அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், அப்பல்லோ நிர்வாகத்தினர், போயஸ் இல்லத்தில் பணியாற்றியவர்கள், உறவினர்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது

விசாரணை ஆணையத்தின் கால வரம்பு மூன்று மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டதால், 2017 டிசம்பர் மாதத்திலிருந்து 6 முறை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டதால், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் இன்று (பிப்ரவரி 24) நிறைவடைந்தது. இதனையடுத்து மேலும் 4 மாதங்கள் ஆணையத்திற்கான விசாரணைக் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

**த.எழிலரசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *