மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

வேளாண் மண்டலச் சட்டம்: அரசிதழில் வெளியீடு!

வேளாண் மண்டலச் சட்டம்: அரசிதழில் வெளியீடு!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளும் வேளாண் மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதர டெல்டா மாவட்டங்களான அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்படவில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முன்னதாக இருக்கும் பழைய திட்டங்களுக்கு இந்த சட்டத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எனினும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு நேற்று ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்ததையடுத்து அந்த மசோதா சட்டமானது. இந்த நிலையில் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசிதழில் இன்று (பிப்ரவரி 22) வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குப் பிறகு அறிவிக்கப்படும் விவசாயத்தைப் பாதிக்கும் குறிப்பிட்ட சில திட்டங்களை இந்த வேளாண் மண்டலப் பகுதிகளில் அமல்படுத்த முடியாது.

த.எழிலரசன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon