மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

திட்டமிட்டபடி சட்டமன்றம் முற்றுகை : இஸ்லாமிய கூட்டமைப்பு!

திட்டமிட்டபடி சட்டமன்றம்  முற்றுகை : இஸ்லாமிய கூட்டமைப்பு!

சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி நாளை (பிப்ரவரி 19) போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏஏவுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமியக் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்து வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை அவர்கள் திட்டமிட்டிருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது

போராட்டத்துக்கு 5 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை இஸ்லாமிய அமைப்புகள் பின்பற்றவில்லை என்று காவல்துறை கூறியதை ஏற்று நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் கூறுகையில், “தேசியக் கொடி ஏந்தி, வரம்பு மீறாத வகையிலும், அமைதியான முறையிலும் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும். எதிர் மனுதாரராகச் சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் தடை எங்களுக்குப் பொருந்தாது என்று கூறியுள்ளார்.

-கவிபிரியா

செவ்வாய், 18 பிப் 2020

அடுத்ததுchevronRight icon