மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

ரஜினியை வரவேற்கும் அமைச்சர்!

ரஜினியை வரவேற்கும் அமைச்சர்!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை திருமங்கலம் நகர்ப் பகுதியில் அன்னதானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட், கவர்ச்சி பட்ஜெட்டாக இல்லாமல், மக்களைக் கவரும் பட்ஜெட்டாக இருக்கிறது என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை பொருத்தவரையில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தெளிவாகச் சொல்லி விட்டனர் என்றார்.

இந்தநிலையில் அவரிடம் மதுரையில் ரஜினி கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், ”மதுரை என்பது பல்வேறு மன்னர்கள் ஆண்ட இடம். அதோடு பல சிறப்பு அம்சங்களையும் கொண்டது. எனவே மதுரை ராசியான இடம் என்று ரஜினிகாந்த் போன்றவர்கள் எல்லாம் இங்குக் கட்சி தொடங்கினாலும் அவர்களுடைய ராசி எந்த விதத்தில் உள்ளது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon