மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

நானே கடிதத்தை வெளியிடுவேன்: ஸ்டாலின் விதித்த கெடு!

நானே கடிதத்தை வெளியிடுவேன்: ஸ்டாலின் விதித்த கெடு!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம், அமைச்சர் ஜெயக்குமார் அளித்த கடிதம் தொடர்பாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதாக முதல்வர் அறிவித்த மறுநாள் (பிப்ரவரி 10) அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சரிடம் வழங்கியதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆனால், கடிதம் தொடர்பாக சந்தேகம் எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆனால், ஸ்டாலின் சங்தேகங்களுக்கான உரிய விளக்கங்களுடன் வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் சட்டமன்ற வளாகத்தில் இன்று (பிப்ரவரி 14) செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தில் நாங்கள் உடன்படுகிறோம். ஆனால், மாநில அரசு நினைத்த நேரத்தில் அவ்வாறு மாற்ற முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “முதல்வரின் அறிவிப்பு வெளியான நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று, முதல்வர் அளித்ததாக ஒரு கடிதத்தை வழங்கினார். அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்று சொல்லப்படவில்லை. இன்று மாலைக்குள் அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று சொல்லியாக வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன்” என்று தெரிவித்தார்.

த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon