நான் படிக்கும் காலத்திலிருந்தே: ரஜினியை விமர்சித்த உதயநிதி

politics

“நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன் என சொல்லி வருகிறார்” என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி சாடியுள்ளார்.

திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. அதில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இளைஞரணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். இளைஞரணியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையையும் உதயநிதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “இந்தியா முழுவதும் மக்கள் மோடியை ஆதரித்தாலும் தமிழகத்தில் அவருடைய பிரச்சாரம் எடுபடவில்லை. இந்தியா முழுக்க மோடி என்றாலும் தமிழகத்திற்கு எங்க டாடிதான். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 70 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளோம். தேர்தலை சரியாக நடத்தியிருந்தால் 90 சதவிகித இடங்களில் வெற்றிபெற்றிருப்போம். அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள்தான் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.

“யார் அரசியலுக்கு வரப்போகிறார்கள் என்றெல்லாம் கவலை வேண்டாம். நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே ஒருவர் அரசியலுக்கு வருகிறேன்… வருகிறேன்… என்று சொன்னார். ஆனால், அவர் இன்று வரை வரவில்லை. அடுத்த வருடமும் வரப்போகிறேன், வரப்போகிறேன் என்றுதான் சொல்வார்கள். அவரை பற்றி திமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று ரஜினியை மறைமுகமாகச் சாடியவர், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞரணியினருக்கு கொஞ்சம்தான் வாய்ப்பளிக்கப்பட்டது. அதுபோல அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்” என்றும் தெரிவித்தார்.

**த.எழிலரசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *