tசேலத்தை விட்டு நாமக்கல் நோக்கி செல்வகணபதி?

politics

திமுகவில் இன்னும் ஓரிரு தினத்தில் ஆபரேஷன் நடத்தப்படும் என்று ஜனவரி 21 ஆம் தேதி திமுக தலைவர் அறிவித்தார். ஆனால் தலைமைச் செயற்குழு நடந்து முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் திமுகவில் இன்னும் , ஆபரேஷன் நடத்தப்படவில்லை.

ஆபரேஷனுக்கான மாசெக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது என்றாலும், அதை வெளியிட ஸ்டாலின் தாமதித்து வரும் இந்த இடைவெளியில், மாற்றத்துக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் இருந்து பலரும் மாசெ பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

கொங்கு மாவட்டங்களில் பலவற்றின் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்ற பேச்சு தலைமைச் செயற்குழு கூட்டம் முடிந்த அன்றிலிருந்தே அடிபடத் தொடங்கியது. ஏனென்றால் அந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விசாரணை நடத்தியது கொங்கு மாசெக்களிடம்தான். அதுவும் நாமக்கல் மாவட்டத்தின் கிழக்கு, மேற்கு என இரு மாசெக்களும் மாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், நாமக்கல்லை மையமாக வைத்து அறிவாலயத்தை நோக்கி படையெடுப்புகள் நிகழ்ந்தபடி இருக்கின்றன.

நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக தற்போது இருக்கும் காந்தி செல்வன் , கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்றாலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இம்முறை நாமக்கலில் மாற்றம் காண தயாராகிவிட்டார் ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, அதிமுகவுடன் தொடர்பு என காந்தி செல்வன் மீது பல புகார்கள் ஸ்டாலினுக்குச் சென்றுள்ளன. எனவே நாமக்கல் கிழக்கு மாசெ பதவிக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு இரு பெயர்கள் மாவட்டத்தில் பேசப்படுகின்றன.

திமுகவின் சட்ட திட்ட திருத்தத் குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான நக்கீரன், தற்போதைய இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் குமார் ஆகிய பெயர்கள் அடிபடுகின்றன. தலைமைக் கழக நிர்வாகிகளிடம் நல்ல அறிமுகம் கொண்ட நக்கீரன் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். திமுகவில் இருந்து வைகோ பிரிந்தபோது கட்சிக் கொடி, சின்னம் ஆகியவற்றை மீட்கும் வழக்கில் அப்போதைய வழக்கறிஞர் அணிச் செயலாளர் என்.வி.என். சோமு தலைமையிலான டீமில் முக்கிய பங்கு வகித்தவர் நக்கீரன். எந்த சர்ச்சைக்கும் ஆளாகாதவர் என்பதும் இவருக்கு பிளஸ்ஸாக இருக்கிறது.

இளைஞரணி அமைப்பாளரான ராஜேஷ்குமார் கட்சித் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அறிமுகமானவர். கொங்குவில் மைனாரிட்டி சமுதாயமான நாட்டுக் கவுண்டர் சமுதாயத்தைச் சேந்தவர் என்பதால் இவருக்கு மாசெ பதவி கொடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையும் தலைமைக்கு இருக்கிறது. எனவே இவருக்கு மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் பதவி அளிக்கலாம் என்றும் நாமக்கல் திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான மூர்த்திக்கு எதிராகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. அதனால் இங்கேயும் மாற்றம் நடக்கலாம் என்ற நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் டி.எம். செல்வகணபதி நாமக்கல் மேற்குக்காக தலைமையிடம் முயற்சித்து வருகிறார் என்று தகவல்கள் வருகின்றன. சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ராஜா, சிவலிங்கம், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், இப்போது புதிதாக வந்திருக்கும் எம்.பி. பார்த்திபன் யாரும் தன்னை மதிப்பதில்லை என்ற குமுறல் செல்வகணபதிக்கு இருக்கிறது. இந்த நிலையில் தனக்கு சொந்த ஊர் ராசிபுரம்தான் என்றும், அதனால் நாமக்கல் மேற்கு மாசெ பதவி தனக்கு கொடுத்தால் திறம்பட செயல்படுவதாகவும் ஸ்டாலினிடம் செல்வகணபதி விருப்பம் தெரிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதேநேரம் நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்கு மாசெவாக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வெப்படை செல்வராஜும் கடுமையாக முயற்சித்து வருகிறார். கடந்த முறையே செல்வராஜை மாசெ ஆக்கவே ஸ்டாலின் விரும்பினார். ஆனால் காந்தி செல்வன் மூர்த்திக்கு ஆதரவு தெரிவித்ததால் இவர் தோல்வியடைந்தார். இம்முறை மாசெ ஆகியே தீருவது என்று சென்னையிலேயே முகாமிட்டிருக்கிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *