மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

தொலைக்காட்சிகளில் எதை விவாதிக்க வேண்டும்: உத்தரவிடுகிறதா பாஜக?

தொலைக்காட்சிகளில் எதை விவாதிக்க வேண்டும்: உத்தரவிடுகிறதா  பாஜக?

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளைக் கடந்த சில நாட்களாக பாஜக புறக்கணித்து வருகிறது. எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இந்த புறக்கணிப்பை பாஜக மேற்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஒரு செய்தி சேனல் விவாதத்தின் போது பாஜகவின் நாராயணன் திருப்பதிக்கும் அதிமுகவின் ஜவஹர் அலிக்கும் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் பாஜக தமிழக பொறுப்புத் தலைமையில் இருந்து யாரும் பாஜக சார்பில் டிவி விவாதங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதனால் வலதுசாரி, இந்து அமைப்பினர் என்ற பெயர்களில் சிலரை விவாதத்துக்கு அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தமிழக ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்திடம், ‘’ஏன் பாஜகவினர் ஊடக விவாதங்களில் கலந்துகொள்வதில்லை?” என்று கேட்டதற்கு, “பல ஊடகத்தினரும் இதே கேள்வியைக் கேட்கிறார்கள்” என்று விளக்க அறிக்கையை வாசித்தார்.

“பொதுவாக அன்றைய பரபரப்பான, முக்கிய நிகழ்வுகள் குறித்தே தமிழக ஊடகங்கள் விவாதங்களை முன்னெடுப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது அப்படி ஏதும் நடக்கவில்லை. கடந்த 22/01/2020 அன்று சென்னை அண்ணா சாலை, ரிச்சி தெருவில் உள்ள ஒரு கடையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரிப்பதாக பதிவு செய்யப்பட்ட பேனாக்களை விற்பதாக, அந்த கடைக்கு முன் மிக பெரிய போராட்டத்தை சட்ட விரோதமாக சில இஸ்லாமிய அமைப்புகள் நடத்தின. அந்த கடையின் உரிமையாளர் மிரட்டப்பட்டார். 26 ஆம் தேதி ஞாயிறன்று அந்த கடை தாக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரித்து கொண்டிருந்த போது, 2000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள், இரவு 10 மணிக்கு மேல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யுமாறு ரகளையில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையை மிரட்டும் தொனியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீச முயற்சித்த தீய சக்திகளின் முயற்சி மு றியடிக்கப்பட்டது.இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறை கைது செய்தது.

27 ஆம் தேதி திங்களன்று திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு முகமது பாபு என்ற நபரால் வெட்டி கொல்லப்படுகிறார். 28 ஆம் தேதி மாலை அலங்காநல்லூரில் பாஜகவின் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தாக்குதலை நடத்தியதில் பாஜக நிர்வாகிகள் காயமடைந்தனர். அந்த கூட்டத்தில் திருமாவளவன் பெயரை சொல்லக்கூடாது என்று காவல்துறையினராலும், வி சி க வினராலும் நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களில் நடை பெற்ற, மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளை ஊடகங்கள் மறந்து விட்டனவா? மறைத்து விட்டனவா? இது குறித்து பேசுவதற்கு அச்சப்படுகின்றனவா? ஊடகங்கள் இது குறித்து விவாதிக்க மறந்தது ஏன்? மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் குறித்தும் தமிழக ஊடகங்கள் உரிய முக்கியத்துவத்தோடு விவாதம் செய்வதே ஊடக பொறுப்புணர்ச்சியை மேம்படுத்தும். ஒருவேளை, ஊடகங்களுக்கு அச்சம் இருப்பின் மாநில காவல்துறையிடம் உரிய பாதுகாப்பை பெற்று கொண்டு விவாதம் செய்வது சிறப்பை தரும்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு, மதசார்பற்ற தன்மை, கருத்து சுதந்திரம், ஜனநாயகம் பாதிக்கப்படும்போது பொங்கியெழ வேண்டிய ஊடகங்கள் இது குறித்து விவாதம் செய்ய மறந்து போன நிலையில், மறுக்கும் நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து விவாதங்களை செய்து விட்டு மற்ற விவகாரங்களை அலசலாம் என அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளோம். இந்நிலையில், விரைவில் தமிழக ஊடகங்கள் இது குறித்து விவாதம் செய்து தங்கள் ஊடக தர்மத்தை நிலை நாட்டும் என்று நம்புகிறோம்” என்கிறார் பிரசாத்.

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வியாழன் 30 ஜன 2020