மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடமா? ராமதாஸ்

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடமா? ராமதாஸ்

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்ட, அதனை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் பட்டாவுடன் சவால் விடுத்தார். இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து அறிக்கை போர் நடந்துவந்தது. இந்த நிலையில் முரசொலி நில விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளிக்க, விசாரணையை தீவிரப்படுத்தியது ஆணையம்.

இதன் பின்னணியில் முரசொலி நில விவகாரம் தொடர்பாக அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதாக ராமதாஸ்,சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதன் விசாரணையின்போது நீதிமன்றத்தில் முரசொலி மூலப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே முரசொலி தொடர்பான விசாரணையை ஜனவரி 27ஆம் தேதி முடித்த பட்டியலினத்தோர் ஆணையம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இந்த நிலையில் முரசொலி அலுவலகம் வாடகை இடத்தில் இயங்குவதாக பட்டியலினத்தோர் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிக்கையின் நகல் ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ்,

“அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது” என்றும் சாடியுள்ளார்.

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வியாழன் 30 ஜன 2020