மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக சொல்லும் மாநாட்டு மெசேஜ்!

டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக சொல்லும் மாநாட்டு மெசேஜ்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“ஜனவரி 31 ஆம் தேதியன்று திருச்சியில் திமுக சார்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 18 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், , ‘தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு - ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு,, வருகிற 31-1-2020 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில், திருச்சி, மணப்பாறை சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரி (CARE COLLEGE) வளாகத்தில் நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி நாளை நடக்க இருக்கும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்த மாநாடு முழுக்க முழுக்க திமுக மாநாடாகவே நடக்கும் நிலையில், ‘உள்ளாட்சித் தேர்தலை கூட்டணியாகத்தானே திமுக சந்தித்தது. அதனால் கிடைத்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டை திமுக மட்டுமே நடத்தலாமா... இதில் கூட்டணிக் கட்சியினரின் பிரதிநிதிகள் வேண்டாம், கூட்டணித் தலைவர்களையாவது அழைத்திருக்கலாமே? அதை ஏன் ஸ்டாலின் செய்யவில்லை?’ என்ற முணுமுணுப்புகள் திமுக கூட்டணியில் எழுந்திருக்கின்றன.

மேலும், சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு திமுக தலைவர் முடிவெடுக்கிறார். அதில் மட்டும் எல்லா கூட்டணித் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். ஆனால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் மட்டும் கூட்டணிக் கட்சிகள் தேவையில்லையா? ஏற்கனவே திமுக கூட்டணியில் பல சலசலப்புகள் எழுந்த வண்ணமும் அடங்கிய வண்ணமும் உள்ளன. இந்நிலையில் இப்படிப்பட்ட நிகழ்வில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து அடுத்த கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணியை திமுக வலுப்படுத்த வேண்டாமா? திமுகவை எதிர்த்து நின்று திமுக வேட்பாளர்களையே தோற்கடித்த சுயேச்சை பிரநிதிதிகளை கூட அழைப்பார்களாம், அவர்களுக்கு இடம் கொடுப்பார்களாம். ஆனால் திமுகவோடு கூட்டணியாக நின்று வென்ற சக தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளை கண்டுகொள்ளமாட்டார்களாம்... இந்த மாநாட்டின் மூலம் திமுக என்ன செய்தி சொல்ல வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்டப் புள்ளிகளே தங்களுக்குள் பேசிக் கொண்டு இதை மாநிலத் தலைவர் அழகிரிக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

திமுகவின் இந்த மாநாடு பற்றிய அறிவிப்பு ஜனவரி 18 ஆம் தேதி வெளிவந்தது. அன்றுதான் திமுக- காங்கிரஸ் கூட்டணி சர்ச்சை முடிந்து அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி சந்தித்தார். திமுகவுக்கும் காங்கிரஸுக்குமான வார்த்தைப் போர் கடுமையான காலகட்டத்தில் இருந்த நிலையில்தான் இந்த மாநாட்டுக்கான திட்டமிட்டது திமுக. அந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை என்கிறார்கள் திமுக தரப்பில்.

இதேசமயம் கேரளாவில் நடந்த போராட்டங்களுக்குக் கூட காங்கிரஸால் அழைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திருச்சி மாநாட்டுக்கு திமுகவால் அழைக்கப்படவில்லையே என்ற வருத்தம் சிறுத்தைகளிடையே நிலவுகிறது.

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வியாழன் 30 ஜன 2020