மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

தலைவர்களின் பொங்கல் விழா!

தலைவர்களின் பொங்கல் விழா!

பொங்கல் விழாவை தலைவர்கள் தங்களது வீடுகளில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழரின் தனித் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டு வாசலில் தோரணம் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு உற்சாகமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றது. அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பொங்கல் விழாவை தனது இல்லத்தில் கொண்டாடினார். மேலும், குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து நாதஸ்வர இசைக் கச்சேரியை கேட்டு மகிழ்ந்தார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாடும் புனித சந்தர்ப்பத்தில் எனது இல்லத்தில் சென்னையைச் சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய பக்தி நாதஸ்வரம் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தேன். நமது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இசை மற்றும் கலை வடிவங்களைப் பாதுகாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலுள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினார். மேலும், அருகிலுள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபாடும் நடத்தினார்.

சென்னை மெரினாவிலுள்ள அண்ணா சதுக்கத்துக்கு இன்று (ஜனவரி 15) சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சித்தரஞ்சன் சாலையிலுள்ள தனது இல்லத்திற்கு வந்திருந்த தொண்டர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வீட்டில் கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் முன் இன்று வாழ்த்து தெரிவிக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர். காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு இரு கரம் கூப்பி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு பின்னர் வீட்டுக்குள் சென்றார்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

புதன் 15 ஜன 2020