மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

அமைச்சரவை விரிவாக்கம்: எடியூரப்பாவுடன் மோதிய சாமியார்!

அமைச்சரவை விரிவாக்கம்:  எடியூரப்பாவுடன் மோதிய சாமியார்!

கர்நாடக பாஜக முதல்வர் எடியூரப்பாவை மேடையில் வைத்துக் கொண்டே, தனது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு சாமியார் ஒருவர் மிரட்டல் தொனியில் அமைச்சர் பதவி கேட்டதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பா மேடையை விட்டு கீழே இறங்க முயற்சித்ததும் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜனவரி 14 ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹரிஹரா பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் எடியூரப்பாவும், பஞ்சமசலி சமூகத்தைச் சேர்ந்த வச்சானந்த சுவாமி என்ற சாமியாரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வச்சானந்தா, "முதலமைச்சர், நீங்கள் ஒரு நல்ல மனிதர், முருகேஷ் நிராணி (பாஜக எம்எல்ஏ) உங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார், அவர் உங்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார். . நீங்கள் அவரை கைவிட்டால், அவர் சார்ந்த பஞ்சமசலி சமூகம் உங்களை விட்டு விலகும்”என்று பேச, இதைக் கேட்டு அதிர்ந்து போன முதல்வர் எடியூரப்பா சட்டென கோபப்பட்டு நாற்காலியில் இருந்து எழுந்து மேடையை விட்டு இறங்கத் தயாரானார்.

அப்போது சாமியாரும், மற்றவர்களும் அவரை சமாதானப்படுத்தினர். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த எடியூரப்பா, வச்சானந்தாவைப் பார்த்து...

“நீங்கள் இப்படி பேசினால் நான் போய்விடுவேன் ... நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நீங்கள் இப்படி பேசக்கூடாது, நீங்கள் இப்படி பேசினால் என்னால் வேலை செய்ய முடியாது. நீங்கள் எங்களுக்கு ஆலோசனை சொல்லுங்கள். ஆனால் அச்சுறுத்த முடியாது” என்று கூறினார். உடனே வச்சானந்தா முதல்வரை சமாதானப்படுத்திய பின். தன் இருக்கையில் அமர்ந்தார் எடியூரப்பா.

சாமியாரால் அமைச்சர் பதவிகோரப்பட்ட நிரானி முந்தைய எடியூரப்பா அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்தவர். சம்பவம் நடந்தபோது அவரும் மேடையில் அமர்ந்திருந்தார்.

பின்னர் இந்த நிகழ்வில் உரையாற்றிய எடியூரப்பா, “வச்சானந்தா சுவாமிஜி அந்த சமூகத்துக்கான உரிமையைக் கேட்டுள்ளார். எனது நிலைமையையும் புரிந்து கொள்ளுமாறு உங்கள் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர்களாக இருந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் (காங்கிரஸ்-ஜே.டி.எஸ்) ராஜினாமா செய்து விலகி இருக்கவில்லை என்றால், எடியூரப்பா இந்த முதலமைச்சர் பதவியை அடைந்திருக்க முடியாது. எனக்கு அதிகாரம் முக்கியமில்லை. இது தேவையில்லை என்று நினைத்தால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுவேன். நீங்கள் என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். அதை தனிப்பட்ட முறையில் கேளுங்கள். எனக்கு சுயநலம் இல்லை, பஞ்சமசலி-லிங்காயத் சமூகம் என்னுடன் நிற்கவில்லை என்றால், நான் இந்த நாற்காலியில் (முதல்வர்) அமர்ந்திருக்க முடியாது என்பதை நான் அறிவேன். ஆனால் என் நிலைமையையும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

அமைச்சரவையை விரிவுபடுத்த தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் அனுமதி கேட்டும் எடியூரப்பாவுக்கு இன்னும் டெல்லி ஒப்புதல் கிடைக்கவில்லை. தற்போது, அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 18 அமைச்சர்கள் உள்ளனர். 34 பேர் வரை கர்நாடக அமைச்சரவையில் இருக்க முடியும். இடைத்தேர்தலில் வென்ற எம்.எல்.ஏ.க்கள், தனது பழைய நண்பர்கள், பல்வேறு சமூகத்தினர் என்று அமைச்சர் பதவி கோரும் பலரும் முயற்சிப்பதால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் எடியூரப்பா.

அதைத்தான் சாமியார் முன் மேடையிலேயே, ‘என் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்’என்று சொல்லிப் புலம்பியிருக்கிறார்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

புதன் 15 ஜன 2020