மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

சிறுத்தைகள் மீது சீற்றத்தில் திமுக!

சிறுத்தைகள் மீது சீற்றத்தில் திமுக!

டெல்லியில் ஜனவரி 13ஆம் தேதி நடந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனிடம் திமுக புறக்கணிப்பு பற்றிக் கேட்டதற்கு, “நான் டெல்லி வந்தபிறகு குறிப்பாகக் கூட்டம் நடக்கும் அறைக்குச் சென்ற பிறகுதான் இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் தெரிந்தது. அதுகுறித்து திமுக தலைமை என்ன நினைக்கிறது என்பதுபற்றி அறிந்த பிறகுதான் சொல்ல முடியும்” என்றார் திருமாவளவன்.

இதற்கிடையே இக்கூட்டத்தில் திருமாவளவன் கலந்துகொண்டதை சமூக தளங்களில் பாராட்டித் தள்ளும் காங்கிரஸார், ‘ராகுல் காந்தியின் உண்மையான தோழன்’ என்று திருமாவளவனை அடைமொழி அளித்து வருகிறார்கள். திமுக கலந்துகொள்ளாத நிலையில் திமுக கூட்டணியைச் சேர்ந்த திருமாவளவன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றி திமுகவுக்குள் சலசலப்புகள் நிலவி வருகின்றன.

“திருமாவளவன் திமுகவை விட காங்கிரஸோடு அதிக நட்பு பாராட்டி வருகிறார். அதன் அடிப்படையில்தான் இந்தக் கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார். ஏற்கனவே தன்னிச்சையாக தமிழக முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து சென்னை மாநகராட்சியைத் தனி மாநகராட்சியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ரஜினிகாந்த் வீட்டுக்கு பொக்கே கொடுத்து அனுப்பப்பட்டது. அதுமட்டுமல்ல மத்திய பாஜக அரசோடும் இணக்கமாகவே இருக்கிறார்கள் சிறுத்தைகள். சமீபத்தில் பிஎஸ்என்எல் தொடர்பான பெரிய கான்டிராக்ட் ஒன்று சிறுத்தைகளுக்கு அமித் ஷாவால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் திமுக கலந்துகொள்ளாத நிலையிலும் சிறுத்தைகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்” என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் சில திமுக எம்.பி.க்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

புதன் 15 ஜன 2020