மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல்

புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல்

பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற இருக்கும் டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து 70 இடங்களுக்கும் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நேற்று (ஜனவரி 14) அறிவித்துள்ளது. கட்சித் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற அதீஷி, திலீப் பாண்டே மற்றும் ராகவ் சாதா உட்பட குறைந்தது 23 புதிய முகங்களுக்குக் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 15 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், "அனைவருக்கும் வாழ்த்துகள். மனநிறைவு கொள்ளாதீர்கள். கடினமாக உழைக்க வேண்டும். மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீதும் நம் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கடவுள் ஆசீர்வதிப்பார்" என்று கூறியிருக்கிறார்.

இந்த முறை, ஓபிசி வேட்பாளர்களின் எண்ணிக்கை 2015இல் ஏழிலிருந்து பதினொன்றாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பெண்கள் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆறு முதல் எட்டு வரை அதிகரித்துள்ளது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பதர்பூர் எம்.எல்.ஏ என்.டி சர்மா, தான் கட்சியை விட்டு விலகுவதாகவும் , வேட்பாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது