மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

வில்சன் கொலையில் தொடர்புடையவர்கள்: தமிழக போலீஸிடம் ஒப்படைப்பு!

வில்சன் கொலையில் தொடர்புடையவர்கள்: தமிழக போலீஸிடம் ஒப்படைப்பு!

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைதான இருவரும் கன்னியாகுமரி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். வில்சன் கொலை தொடர்பாக அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் ஆகியோர் வில்சனை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

இருவரையும் பிடிப்பதற்காக தமிழக மற்றும் கேரள போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர் . இந்த நிலையில் இருவரையும் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து கர்நாடக போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மங்களூரு சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல இருவரும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருவரும் குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் மற்றும் தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon