மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

ஓபிஎஸ் சொத்துகள்: ரகசியமாய் நடக்கும் விசாரணை!

ஓபிஎஸ் சொத்துகள்: ரகசியமாய் நடக்கும் விசாரணை!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று ஜனவரி 14 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஓபிஎஸ் சுக்கு வாழ்த்து தெரிவித்து இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் வெளியாகியிருக்கும் வாழ்த்துக் கவிதையின் வரிகள் அதிமுகவுக்குள் விவாதமாகியிருக்கின்றன.

கெத்து கழகத்து சொத்து என்ற தலைப்பில் வெளியான அந்த கவிதையில், “வல்லூறுகள் வசமிருந்து வாகைத் தாய் இயக்கத்தை காப்பாற்றிக் கரை சேர்க்க, எடப்பாடி தந்த இரும்பு மனிதருக்கு இணையில்லா முதல்வருக்கு இடக்கரமாய், வலக்கரமாய் அரணாகி நின்ற அண்ணனே” என்ற வரிகள்தான் உற்று கவனிக்கப்படுகின்றன.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் கட்சியில் முதன்மையானவர், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முதன்மையானவர் என்ற கருத்து கட்சியில் உலவிக் கொண்டிருக்கும் நிலையில்...கட்சி,. ஆட்சி என இரண்டுக்குமே முதன்மையானவர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், அந்த இணையில்லா இரும்பு மனிதர் எடப்பாடிக்கு இரு கரங்களாக இருப்பவரே ஓ.பன்னீர்தான் என்றும் மிக சாமர்த்தியமாக இரட்டைத் தலைமையின் பொறுப்புகளை எடுத்துக் கூறியிருக்கிறது இந்தக் கவிதை.

இதற்கிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மையமாக வைத்து மத்திய அரசு ஓர் ரகசிய ஆபரேஷனை நடத்திவருவதாகவும் தகவல் அதிமுக வட்டாரங்களில் இருந்தே லீக் ஆகியிருக்கிறது. அதாவது ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அவரோடு தொடர்புடையவர்களுக்கும் சொந்தமான சொத்துகள் என்னென்ன, அவை சமீபகாலமாக யாரிடம் இருந்து யாருக்கு கைமாறின என்பதையெல்லாம் பட்டியலிட்டு வைத்துக் கொண்ட மத்திய உளவுத்துறை இது சரியாக இருக்கிறதா என்று சில வாரங்களாகவே விசாரித்து வருகின்றனர். திரட்டப்பட்ட பெரும்பாலான விவரங்கள் சரியாகவே இருக்கிறது என்று மத்திய அரசுக்கு தகவல் சென்றிருக்கிறது.

இந்த விஷயத்தை மெல்ல மெல்ல அறிந்துகொண்ட ஓபிஎஸ் தரப்பினர், ‘இவ்வளவு சரியாக விவரங்களைக் கொடுத்தது யாராக இருக்கும்?” என்று தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon