மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

என்.ஆர்.சிக்கு இடமில்லை: பாஜக கூட்டணி முதல்வர்!

என்.ஆர்.சிக்கு இடமில்லை: பாஜக கூட்டணி முதல்வர்!

குடியுரிமை சட்டத்தையும், அதைத் தொடர்ந்து என்.ஆர்.சியையும் அமல்படுத்தியே தீருவோம் என்று பாரதிய ஜனதா தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், ஐக்கிய ஜனதா தள தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ்குமார், ‘பிகாரில் என்.ஆர்.சி.க்கு இடமில்லை” என்று சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறார்.

இன்று (ஜனவரி 13) பிகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்வின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நித்தீஷ்குமார்,

“சிஏஏ பிரச்சினை குறித்து சிறப்பு கலந்துரையாடல் வேண்டும். இது தொடர்பான ஒவ்வொரு பிரச்சினையும் விவாதிக்கப்பட வேண்டும் . யாருடைய மனதிலும் சில குழப்பங்கள் இருக்கக் கூடும். வெவ்வேறு கருத்துக்கள் வரும் புள்ளி குறித்து விவாதிக்கப்பட வேண்டும்” என்று கூறியவர் என்.ஆர்.சி. பற்றி பேசும்போது,

“என்.ஆர்.சி.யை பிகாரில் நடைமுறைப்படுத்த மாட்டோம். என்.ஆர்.சிக்கு எந்த நியாயமும் இல்லை. அது அஸ்ஸாமை மட்டுமே அடிப்படை அலகாக கொண்டு விவாதிக்கப்பட்டது. அதை நாடு முழுவதும் கொண்டுவருவதை ஏற்க மாட்டோம். ஏற்கனவே பிரதமர் மோடியும் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார். சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவை குறித்து பிகார் சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு விவாதம் நடத்தலாம்” என்று முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவரான பிரசாந்த் கிஷோர் சில வாரங்களாகவே என்.ஆர்.சிக்கும், சிஏஏ சட்டத்துக்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவை இரண்டுக்கும் பிகாரில் இடமில்லை என்றும் அவர் கூறினார். மேலும் இவற்றை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக காங்கிரஸ் கட்சிக்கு நேற்று பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் பிகார் முதல்வர் நித்தீஷ்குமார் தன் அரசின் நிலையை வெளியிட்டிருக்கிறார்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

திங்கள் 13 ஜன 2020