மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

இலங்கை வர வேண்டும்: ரஜினிக்கு அழைப்பு!

இலங்கை வர வேண்டும்: ரஜினிக்கு அழைப்பு!

இலங்கைக்கு வர வேண்டுமென நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகத் தமிழ் வா்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல்’ நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு சாதனை தமிழா்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை, விக்னேஸ்வரன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையிலுள்ள தமிழர்களின் தற்போதைய நிலை, ரஜினி ஆரம்பிக்கவுள்ள அரசியல் கட்சி, இந்திய அரசியல் தொடர்பாக இருவரும் விவாதித்துள்ளனர். சந்திப்பின்போது, இலங்கை வடக்கு மாகாணத்துக்கு வர வேண்டுமெனவும், அங்கு தமிழர்களைச் சந்திக்க வேண்டுமெனவும் ரஜினிகாந்துக்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

இலங்கையின் மக்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் வீடுகளை இலவசமாக வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் செல்ல இருந்ததால் பல்வேறு எதிர்ப்புகள் தமிழகத்தில் கிளம்பியது. இந்த நிலையில் இப்போது விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே சென்னை எழும்பூர் அம்பாசிடர் பல்லவா விடுதியில் தங்கியிருந்த விக்னேஸ்வரனை, விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அவருக்குப் பொன்னாடை அணிவித்து Human values and Human rights என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழல்கள் தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறிக்கொண்டோம். ராஜபக்‌ஷே குடும்பம் வெற்றிபெற்ற பிறகு தமிழ் மக்களிடம் நிலவும் அச்சம் குறித்தும், அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் பேசினோம்” என்று தெரிவித்தார்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

திங்கள் 13 ஜன 2020