மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

சோனியா கூட்டிய கூட்டம்: திமுக புறக்கணிப்பு!

சோனியா கூட்டிய கூட்டம்:  திமுக புறக்கணிப்பு!

சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் இது தொடர்பாக இன்று (ஜனவரி 13) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸின் உற்ற தோழமைக் கட்சியாக கருதப்படும் திமுகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றே டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உட்பட 20 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாதது தமிழ்நாட்டு அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி திமுகவை மதிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டி ஜனவரி 10 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார். உடனே ப.சிதம்பரம், ‘இது ஆதங்கம்தான் கோபம் அல்ல. இதனால் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை’ என்று தெரிவித்தார். மறுநாள் அழகிரியே, அது நேற்றோடு முடிந்துவிட்டது என்றார்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் திமுக, அதற்காகவே கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் மூலம் காங்கிரஸுக்கு என்ன செய்தியை சொல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் உண்டான மனக்கசப்பை இந்தப் புறக்கணிப்பு மூலம் திமுக வெளிக்காட்டியுள்ளதா என்றும் அரசியல் அரங்கில் விவாதிக்கப்படுகிறது.

இத்தனைக்கும் திமுகவின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று டெல்லியில்தான் இருந்தார். காலையில் அவர் தேர்தல் ஆணையரை சந்தித்து ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக புகார் மனு அளித்தார். அவர் டெல்லியில் இருந்தும் சோனியா கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. திமுகவின் மக்களவை குழுத் துணைத் தலைவர் கனிமொழியை இதுகுறித்துக் கேட்க தொடர்புகொண்டபோது, அவர் சென்னையில் பொங்கல் விழாவில் இருப்பதாக அவரது தரப்பினர் தெரிவித்தனர்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

திங்கள் 13 ஜன 2020