)
உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை மநீம வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி ஒருசில நாளில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் ஆளும் கட்சியினரே வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில் மநீம இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கோயம்பத்தூா் மாநகராட்சியின் 47 வாா்டுகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்று இரண்டாம் கட்டமாகச் சென்னை, மதுரை மாநகராட்சிகளுக்கான 51 வேட்பாளர்கள் பட்டியலை மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதில், மதுரை மாநகராட்சியில் 33 வார்டுகளுக்கும், சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளுக்கும், ஆவடி மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கும், போடி நகராட்சியில் 3 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை வெளியிட்டுள்ள கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளாட்சித் தேர்தலில் மநீம சார்பில் போட்டியிடும் தகுதி மிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,”