Sகராத்தே தியாகராஜனுக்கு கொரோனா

Published On:

| By Balaji

சென்னையின் முன்னாள் பொறுப்பு மேயரும், பாஜக பிரமுகருமான கராத்தே தியாகராஜன் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் தனது உடல் நலனை பரிசோதித்தார் கராத்தே தியாகராஜன். அப்போது அவருக்கு இதயத்தில் சிறு அளவிலான அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதையடுத்து ஏப்ரல் 23 ஆம் தேதி அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கலாமா, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யலாமா என்று மருத்துவர்கள் ஆலோசித்து 26 ஆம் தேதி அவருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்வது என ஏப்ரல் 24 ஆம் தேதி முடிவெடுத்தனர். அதன் படி தயாராகிக் கொண்டிருக்கையில்…. திடீரென ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு கராத்தே தியாகராஜனுக்கு காய்ச்சல் ஏற்பட, உடனடியாக கொரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்தது. எனவே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்த மருத்துவர்கள் அதை ஒத்தி வைத்துவிட்டு, முதலில் கொரோனா சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

“கராத்தே தியாகராஜனுக்கு காய்ச்சல் அடித்தது ஒரு வகையில் நல்லதுதான். காய்ச்சல் ஏற்பட்டதால்தான் கொரோனா சோதனை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இல்லையென்றால் கொரோனா சோதனை மேற்கொள்ளாமலேயே ஓப்பன் ஹார்ட் சர்ஜரி சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டிருக்கும். கொரோனா தொற்று இருக்கும் நிலையில் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருந்தால் அது மேலும் சிக்கலாகியிருக்கும். எனவே காய்ச்சல் அடித்ததன் மூலம் கொரோனா சோதனை செய்யப்பட்டு அது பாசிட்டிவ் என்று வந்ததும், இதய அறுவை சிகிச்சைக்கு முன்னதாக கொரோனா சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இப்போது கராத்தே தியாகராஜன் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்” என்கிறார்கள் மருத்துவ வட்டாரங்களில்.

அதிரடி அரசியல்வாதியான கராத்தே தியாகராஜனுக்கு கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகையாளர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கராத்தேவின் உடல் நலன் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share