தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பாதுகாப்பு இல்லை, முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பெண் காவலர்களுக்கான மொபைல் டாய்லெட் வாகனம் என்ற பெயரில் பெரும்பாலான மையங்களில் லாரிகள் வந்து செல்வதாகவும், பல “ஒய் -பை” கனெக்ஷன்கள் அந்த மையங்கள் அருகே செயல்பாட்டில் இருப்பதாகவும் திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.
இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேசைகள் ஒதுக்கப்படும். அதே நேரம் பெரிய தொகுதிகளுக்கு 30 மேசைகள் வரை வைத்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
மே 2 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அன்று முழு ஊரடங்கு என்பதால் வாக்கு எண்ணிக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கால்குலேட்டர் மாதிரி. எனவே அவற்றை வைஃபை போன்ற எந்த வெளிப்புற தகவல் தொடர்பு மூலமாக எந்த வகையிலும் இயக்க முடியாது என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 234 தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் பார்வையாளர்கள் அமர்த்தப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்காக அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே வந்த கண்டெய்னர் கழிவறை வாகனம். ஸ்ட்ராங்க் ரூம் அருகே வேறேதும் வாகனம் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
**-பிரியா**
�,