தமிழகத்தில் 1689 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜனவரி 20) நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த 8 மாதத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் செய்துள்ள திட்டங்கள் குறித்துப் பட்டியலிட்டார்.
725 திருக்கோயில்களுக்குத் திருப்பணி வழங்க அனுமதி.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமனம்.
அன்னைத் தமிழில் அர்ச்சனை.
ஒருகால பூசைத் திட்டத்திற்கு 1 லட்சமாக இருந்த நிதி 2 லட்சமாக உயர்வு. அத்திட்டத்தில் உள்ள அர்ச்சகர்களுக்கு முதல் முறையாக- ஊக்கத் தொகையாக 1000 ரூபாய் வழங்குதல்.
10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்.
திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்.
1689 கோடி ரூபாய் மதிப்புள்ள திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு.
10 ஆண்டுகளுக்கும் மேல் ஓடாமல் இருந்த சமயபுரம், திருத்தணி கோயில் தங்கரதங்கள் உலா வர நடவடிக்கை.
100 திருக்கோயில்களில் உள்ள நந்தவனங்கள் மேம்படுத்துதல், திருத்தேர் திருப்பணி, திருக்குளப் பராமரிப்பு.
திருக்கோயில்களில் பணியாற்றி- ஓய்வு பெற்ற அர்ச்சகர், ஓதுவார், இசைக் கலைஞர் ஆகியோருக்கு 1000 ரூபாயாக இருந்த ஓய்வூதியம் 3000 ஆக உயர்வு.
திருக்கோயில் அர்ச்சகர்களுக்குப் புத்தாடை, பணியாளர்களுக்குச் சீருடை.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ஒதுக்கிய நிதி 3 கோடியை 6 கோடியாக உயர்த்தி வழங்கியது.
10 கல்லூரிகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு, 4 கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கியது. இதனால் 500 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் 1 லட்சம் நிதி 2 லட்சமாக உயர்வு.
கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிக்காக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிதி 2 லட்சம் ரூபாயாக உயர்வு உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
**-பிரியா**
�,