Uசிஏஏவை எதிர்க்கும் பாஜக தலைவர்!

Published On:

| By Balaji

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரே கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்கள், வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக இருப்பதால் அதனை திரும்பப் பெற வேண்டுமென நாடு முழுவதும் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லை என்று வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வரும் மத்திய அரசு, அதனை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்துவிட்டது. துப்பாக்கிச் சூடு, தடியடி நடத்தி போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜகவிற்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜகவின் மேற்குவங்க துணைத் தலைவரும், சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமான சந்திர குமார் போஸ், “குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 எந்த மதத்தையும் தொடர்புபடுத்தவில்லை என்றால் ஏன் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் மட்டுமே அதில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஏன் இஸ்லாமியர்களை சேர்க்கக் கூடாது? அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக இருக்கட்டும். அனைத்து மத, இன மக்களும் சமமாக நடத்தப்படும் மதச்சார்பற்ற நாடான இந்தியாவை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இஸ்லாமியர்கள் தங்களது சொந்த நாட்டில் துன்புறுத்தப்படாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டார்கள். எனவே, அவர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்ப்பதில் தவறு ஏதும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்களின் நிலைமை என்ன? பாகிஸ்தானில் உள்ள அஹ்வுதியா முஸ்லீம்களின் நிலை என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பாஜகவிற்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது கவனிக்கத்தத்தாக உள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share