பழனியப்பன்-எம்.ஆர்.கே. வியூகம்: அறிவாலயத்தில் தர்மபுரி அதிமுகவினர்!

Published On:

| By Balaji

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. மாறாக அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன..

தர்மபுரி மாவட்ட திமுகவை வலுப்படுத்த திட்டமிட்ட திமுக தலைமை, அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பனை திமுகவில் இணைத்து தர்மபுரி மாவட்டத்திற்கு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை பொறுப்பாளராக நியமித்தது. அவரிடம் முக்கிய அசைன்மென்ட்களும் கொடுக்கப்பட்டன..

பழனியப்பன் தர்மபுரி மாவட்டத்தில் பெரிய அளவில் மாற்று கட்சி நிர்வாகிகளை அழைத்துவந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா நடத்த தேதி கேட்டு வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார் முதல்வர் ஸ்டாலின் ‌‌

இந்நிலையில் எம்.ஆர்.கே. உடனான ஆலோசனையை அடுத்து… தர்மபுரி பழனியப்பன் தலைமையில் வருபவர்களை (டிசம்பர் 4) இன்று மாலை 5.00 மணிக்கு வருமாறு நேரம் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த பின்னணியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நேற்று இரவு முதல் அதிமுக, அமமுக, பாமக, போன்ற கட்சி நிர்வாகிகளுக்கு பஸ் மற்றும் கார்கள் மற்றும் எக்ஸட்ரா ஏற்பாடுகள் செய்து கொடுத்து, இன்று காலை 11.30 மணியளவில் 25 பஸ் மற்றும் 50 கார்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று கட்சி நிர்வாகிகளை சென்னை அறிவாலயம் நோக்கி அழைத்துக் கொண்டு செல்கிறார்.

இதையறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் கட்சி மாறிப்போகும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்று மட்டும் ரிப்ளை வந்ததாம்.

**வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share