அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெற்று வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (Exit Poll) தற்போது வெளியாகியுள்ளன.
மிசோரம் மாநிலத்தின் எக்ஸிட் போல் நிலவரம்:
ஜீ நியூஸ் (ஜன் கி பாத்) – இசட்.பி.எம் (15-25), எம்.என்.எஃப்(10-14), காங்கிரஸ் (5-9), பாஜக (0-2)
பி மார்க் – இசட்.பி.எம் (9-15), எம்.என்.எஃப்(14-20), காங்கிரஸ் (7-13), பாஜக (0)
இந்தியா டிவி (சி என் எக்ஸ்) – இசட்.பி.எம் (15-25), எம்.என்.எஃப்(10-14), காங்கிரஸ் (5-9), பாஜக (0-2)
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மை வெற்றிக்கு 21 தொகுதிகள் தேவை.
தற்போதைய எக்ஸிட் போல் நிலவரப்படி அங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) இடையே கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மிசோ தேசிய முன்னணியை விட ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு!
வெதர் ரிப்போர்ட்: நடைபயணத்தை ஒத்திவைத்த அண்ணாமலை