ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாரத ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தசூழலில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் இன்று (நவம்பர் 3) செய்தியாளர்களை சந்தித்த ஒய்.எஸ்.ஷர்மிளா, “பாரத ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவின் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்.
கே.சி.ஆர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தெலங்கானா மாநிலம் கடனில் சிக்கி தவிக்கிறது. தெலங்கானா மக்கள் கே.சி.ஆரின் ஆட்சியால் கொதிப்படைந்துள்ளனர். அவரது கொடூரமான ஆட்சியை கவிழ்க்கத் தயாராக உள்ளனர்
பல தரப்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சட்டமன்ற தேர்தலில் நாங்கள் பங்கேற்பது காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை வெகுவாக பாதிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதனால் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி போட்டியிடவில்லை.
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க உறுதி செய்வதற்காகவும் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘தளபதி 68’: தாய்லாந்து சென்ற விஜய்
காற்று மாசால் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம்!