யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மற்றொரு வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தி ரிவேரா ரிசர்ட்டில் தங்கிருந்த போது 409 கிராம் எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக தேனி போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் சவுக்கு சங்கர் மீது இன்று (ஆகஸ்ட் 12) குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. தேனி எஸ்.பி சிவபிரசாத் பரிந்துரையில் ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு சவுக்கு சங்கர் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டதற்கான உத்தரவு மதுரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக பெண் காவலர்களை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் இன்று சிவகங்கை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை பார்த்து கூறுகையில், “சென்னையில் கார் பந்தயம் நடத்தி முடிக்கும் வரை நான் சிறையை விட்டு வெளியே வரக்கூடாது என உதயநிதி உத்தரவிட்டிருக்கிறார். அதனால்தான் என் மீது தினம் தினம் புதிய புதிய வழக்குகள் போடப்படுகிறது” என்று கூறினார்.
இதற்கிடையே பெண் போலீசாரை இழிவாக பேசிய வழக்கில் அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை கடந்த 9 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மீண்டும் இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சசிகலா சுற்றுப்பயணம் : நெல்லை அதிமுகவினர் போலீஸில் புகார்!
சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா?… அப்போ இத மறக்காம படிங்க!