அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு முன் துறை பெயருடன் பொருத்தப்பட்டுள்ள பெயர் பலகையும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறைதான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல் வெளியானாலும் இன்று (டிசம்பர் 14) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.