தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யையும், அவரது கட்சி கொள்கைகளையும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நிலையில், அக்கட்சியின் மாநாட்டுக்கு முன்பு வரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை உரிமையுடன் ஆதரித்து பேசி வந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் அரசியல் மாநாட்டில் தனது கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்து அறிவித்தார். அதில் திராவிடமும். தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று, திராவிடத்தை ஆதரிப்பதாக விஜய் கூறியதை அடுத்து சீமான் தனது அதிருப்தியை கடந்த சில நாட்களாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை பெரம்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (நவம்பர் 1) இரவு தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல..
அதில் கலந்துகொண்டு, “நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி, வரலாற்றை கற்பிக்க வந்தவன் என சீமான் தனது பேச்சை தொடங்கியதுமே தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
தொடர்ந்து அவர், ”விடுதலை பெற்றவன் பேசுவதற்கும், உரிமைக்காக பேசுபவர்களுக்கும் வேறுபாடு உண்டு. தங்களது முன்னோர்கள் உண்மையை உரத்துப் பேசவே தங்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர்.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா?
திராவிடம் என்பது வேறு தமிழ்தேசியம் என்பது வேறு. எப்படி இரண்டும் ஒன்றாகும்? என் இன பாலகன் இறந்துவிட்டான் எனத் துடித்து அழுவது தமிழ் தேசியம். என் தங்கை இசைப்பிரியா கொல்லப்பட்டு கிடந்தபோது துடித்து அழுதது தமிழ் தேசியம். தூர இருந்து ரசித்தது, சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா?
உடம்பிலே நெருப்பைக் கொட்டி வெந்தது வீரத்தமிழ் மகன் முத்துக்குமார். அது தமிழ் தேசிய பெருநெருப்பு.
கடற்கரையிலே தலைக்கு ஒரு குளிரூட்டி. காலுக்கு ஒரு குளிரூட்டி. தலைமாட்டிலே மனைவி. கால்மாட்டிலே துணைவி என்று போலி உண்ணாவிரத நாடகம் நடத்துவது திராவிடம். இரண்டும் ஒன்றா?
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்று தமிழர்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்பது திராவிடம். இரண்டும் ஒன்றா?
தண்ணீர் தர மறுக்கும் அவனுக்கு ஒரு சீட்டும் இல்லை. உன்னுடன் தேர்தல் கூட்டும் இல்லை என்று சொல் என சொல்லுவது தமிழ் தேசியம். இரண்டும் ஒன்றா?
லாரி அடிச்சு செத்துப் போயிடுவாய்!
அடிப்படையே தவறு. உன் கொள்கைகள் என்ன? கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. ஒன்னு சாலையில் அந்த பக்கம் நில்லு. இல்ல இந்த பக்கம் நில்லு. நீ நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப் போயிடுவாய்.
விடுதலைப் போராட்டத்தில் மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் பக்கம் நில்லு. இல்ல மவுண்ட் பேட்டன் பக்கம் நில்லு. நான் நடுநிலை என்கிறாய். இது நடுநிலை அல்ல. மிகவும் கொடு நிலை.
வாட் ப்ரோ. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. வந்தாச்சு. நான் என் கருவிலே என் எதிரி யார்? என்று தீர்மானித்துவிட்டு பிறந்தவன். எவன் என் இனப்பகைவன் என்று முடிவெடுத்துவிட்டு வந்தவன்.
வேலு நாச்சியார் படம் நான் வரைந்தது!
வேலு நாச்சியார் யார் என்று சொல்லுங்கள் தம்பி, நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டியர் யார்? என்று தெரியாமல் போயிருக்கும். நீங்கள் வைத்திருக்கும் கட் அவுட் நான் வரைந்தது தம்பி.
நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும், நாங்கள் படிச்சு PhD பெற்றுவிட்டோம், நீங்கள் சங்க இலக்கியத்தை இனிமேல்தான் எங்கே இருக்கிறது இலக்கியம் என்று தேடணும், ஆனால் சங்க இலக்கியத்தில் வரும் பாண்டிய நெடுஞ்செழியனின் பேரன், பேத்திகள் நாங்கள் தம்பி.
தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது!
எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. 2026ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது; ப்ரோ இது ட்ரைலர்தான், மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால், அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு வரும்” என்று சீமான் கடும் ஆவேசமாக பேசினார்.
அரசியலுக்கு வந்த புதிதில் விஜய்க்கு எதிராக பேசியவர்களை சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக கடந்த மாதம் 19ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில், “விஜய்யின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும்… அவர் கொடி எதுவா வேணாலும் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய்யை மிகவும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : மீண்டும் வீட்டின் தலைவரான சத்யா..!
கிச்சன் கீர்த்தனா : அங்கூரி ரசகுல்லா
அசலூர் ஆட்டகாரனை உள்ளூர் ஆட்டக்காரன் மதிக்கனும்யா!😝😝😝😝
இரண்டு கும்பலும் ஒரே நோக்கத்தோட போராட்ட வேலையில் இறங்கி இருக்கிற காரணம்? அந்த 8+7 % த ஓட்டுக்கு தவிர வேற ஒரு யிருக்கும் இல்லை…இன்னும் மோசமா அடிச்சிகிட்டு விழுவானுக..
பீமுக ரசிச்சி ரசிச்சி சிரிப்பானுக..🤣🤣🤣🤣🤣
அடிச்சிகிட்டு