இளைஞர்களே லவ் பண்ணுங்கய்யா… கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!
சாதி, மத வர்க்கங்களை கடந்து காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்வது நம் சமூகத்தில் அவ்வளவு எளிதல்ல.
காதலை எதிர்ப்பவர்களும், அதை ஆதரிப்பவர்களும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில துணைத் தலைவர் எம்.தேன்மொழி ஆகியோரின் திருமண விழா இன்று (ஆகஸ்ட் 21) நாமக்கல்லில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னின்று நடத்தி வைத்தார்.
பின்னர், மணமக்களை வாழ்த்தி பேசிய கே.பாலகிருஷ்ணன் காதல் குறித்து பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இது திருமண விழாவில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவர் பேசுகையில் “என்னுடைய குடும்பத்தில் அனைவருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.
காலநேரம் பார்த்து, பல்வேறு சடங்குகள் செய்து நடைபெறும் திருமணங்கள் கூட ஆறு மாதங்களில் நீதிமன்ற வாசலில் சென்று நிற்கிறது.
காதல் என்பது சாதி,மதங்களைக் கடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை.
தற்போது இருக்கும் சூழ்நிலைப் போல் அப்போது இல்லை, பல்வேறு போராட்டங்களுக்கு இடையே காதல் திருமணங்கள் நடைபெற்றன.
காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, ஆதலால் இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். சீர்திருத்த முறையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன், தேன்மொழி தம்பதியினர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்” என வாழ்த்தினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கள்ளக்குறிச்சி மாணவி: திமுக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் சரமாரி கேள்விகள்!