Ops asked with a smile

“எதோ முடிவோடதான் வந்திருக்கீங்க போல” – சிரித்துக் கொண்டே கேட்ட ஓபிஎஸ்

அரசியல்

தேர்தல் ஆணையக் கூட்டத்தில் யார் கலந்து கொள்வது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவரிடம், ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் கடிதம் அழைத்திருக்கிறது. அதில் கலந்து கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தேர்தல் ஆணையம் முறைப்படி, சட்டப்படி எப்படி கடிதம் எழுதுவேண்டுமோ அப்படிதான் எழுதி இருக்கிறது. அதிமுக சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, எதோ முடிவோடதான் வந்திருக்கீங்க என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், அதை கூட்டத்தில்தான் தெரிவிக்க முடியும் என்றார்.

மேலும் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் தான் முடிவு எடுக்கவேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கலை.ரா

தமிழக சட்டமன்றம்: அன்று ஏற்பட்ட சர்ச்சை!

ஆளுநருக்கு மிரட்டல்: எம்எல்ஏக்கள் மீது பாஜக போலீசில் புகார்!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.