you can get community certificate by money

5000 இருந்தால் எம்.பி.சி சாதிச்சான்றிதழ்?: ராமதாஸ் குற்றச்சாட்டு!

அரசியல்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையின்‌ மழைக்காலக்‌ கூட்டத்தொடர்‌ அக்‌டோபர் 16ஆம் தேதி தொடங்கும்‌ எனத்‌ தெரிகிறது. அதற்கு முன்பாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்‌ ஆணையப்‌ பரிந்துரையைப்‌ பெற்று, அதனடிப்படையில்‌ வன்னியர்‌ இட ஒதுக்கீட்டு சட்டத்தை சட்டப்பேரவையில்‌ நிறைவேற்றுவதற்கு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரூ,5,000 ஆயிரம் கொடுத்தால் நீங்கள் விரும்பும் சாதி சான்றிதழ் கிடைத்து விடும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (செப்டம்பர் 19) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா? ரூ.5000 இருந்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது. அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் கல்வி, வேலைவாய்ப்பு என பலர் பயனடைந்து வரும் நிலையில் ராமதாஸின் எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் ‘அஸ்வின்’.. அதிரடி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *