உதை வாங்கப்போற… மந்திரிதானே நீ… : மக்களவையில் தயாநிதி மாறன் ஆவேசம்!

Published On:

| By Kavi

Dayanidhi is obsessed in Lok Sabha

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினரை பார்த்து தயாநிதி மாறன் எம்.பி. உட்கார்ரா, உதை வாங்கப்போற என பேசியது பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்  செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது கனிமொழி எம்.பி.பேசினார். பாஜக எம்.பி.க்கள் பேச விடாமல் கோஷம் எழுப்பினர்.
அப்போது ஆவேசமாக எழுந்த தயாநிதி மாறன், இதுதான் பெண்களை பாஜக மதிக்கிற லட்சணமா? என கொந்தளித்தார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 21) ஆ.ராசா எம்.பி. பேச எழுந்தார். தன்னை பேச அழைத்ததற்கு நன்றி என தெரிவித்து பேசத் தொடங்கினார். அப்போது பாஜக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால் ஆ.ராசா தனது பேச்சை நிறுத்தினார். உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்த தயாநிதி மாறன் எம்.பி, “உட்கார்ரா உதை வாங்க போற” என  கத்தினார்.

தொடர்ந்து கோஷம் எழுந்தநிலையிலும், ஆ.ராசாவை அவைத்தலைவர் ராஜேந்திர அகர்வால் பேச சொன்னார். அப்போது இப்படி கோஷம் போடும் போது எப்படி பேச முடியும் என்றார் ஆ.ராசா. “என்ன சொல்றான்” என்று அருகில் இருந்த எம்.பி.க்களிடம் கேட்டார்.

இதையடுத்து, கோஷம் எழுப்பியவர்களிடம்,  ‘உங்களுக்கு என்ன வேண்டும் அமைதியாக இருங்கள்’ என்று கூறி மீண்டும் ஆ.ராசாவை பேச சொன்னார் அவைத் தலைவர்.

இருந்தாலும் கோஷம் அடங்கவில்லை. இதனால் மீண்டும் எழுந்த தயாநிதி மாறன் எம்.பி, “என்னய்யா.. என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே” என்று கோபமாக கத்தினார்.

நேற்றும் இதேபோன்றுதான் கத்தினார்கள் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவை அமைதியான பிறகு ஆ.ராசா சந்திரயான் திட்டம் குறித்து பேசத் தொடங்கினார்.

சந்திராயன் 3 பற்றி சில வார்த்தைகள் பேச என்னை அனுமதித்ததற்கு நன்றி. முதலில் நான் பேச வேண்டாம் என்று நினைத்தேன். காரணம் எனக்கு உடல்நிலை சரியில்லை. குறிப்பாக தொண்டை சரியில்லை என்று கூறி தொடர்ந்து பேசினார்.

இந்த நிகழ்வின் போது தயாநிதி மாறன் எம்.பி. உட்கார்ரா… மந்திரிதானே நீ என்று பேசியதற்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா

“அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்” – அண்ணாமலை

“அதிமுக பாஜக இடையே பிரச்சனையில்லை” – அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.