|

யோகாவிற்கு எந்த காப்புரிமைகளும் இல்லை: பிரதமர் மோடி

அதிபர் ஜே பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் இன்று(ஜூன் 21) நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

அவர்களுடன் அமர்ந்து பிரதமர் மோடியும் யோகாசனம் செய்தார். பின்னர் பேசிய மோடி,”யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது.

யோகா இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான பாரம்பரியம். யோகா என்பது உண்மையில் உலகளாவியது.

பதிப்புரிமை, காப்புரிமைகள், ராயல்டி என எதுவும் இல்லாதது. யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம். விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர்.

Yoga has no patents : PM Modi

யோகாவை தனி நபராகவோ குழுவாகவோ சேர்ந்து செய்யலாம். எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி’ என்றார்.

மேலும், யோகா உங்கள் வயது, பாலினம் மற்றும் உடற்பயிற்சி நிலைக்கு ஏற்றது. ஒட்டு மொத்த உலகிற்கும் இந்தியா அளித்த பரிசுதான் யோகாசனம்.

அமைதியான உலகம், தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க யோகாவின் சக்தியைப் பயன்படுத்துவோம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நனவாக்க ஒன்றிணைவோம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஐக்கியநாடுகள் சபை தலைவர் கசபா கொரேஷி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நடிகர் எரிக் ஆடம்ஸ், கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ், இந்திய உணவுக்கலை நிபுணர் விகாஸ் கண்ணா, ஜெய் ஷெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிகார் விசிட்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் ஸ்டாலின்

கலைஞர் கோட்டமும் சில கண்ணீர்த் துளிகளும்! வியக்க வைக்கும் வேட்கைத் தொண்டர் எ.வ.வேலு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts