கர்நாடக பாஜக மாநில தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்!

Published On:

| By Selvam

கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா எடியூரப்பா இன்று (நவம்பர் 10) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில பாஜக தலைவராக சட்டமன்ற உறுப்பினர் விஜயேந்திரா எடியூரப்பாவை பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா நியமித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் 2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தற்போது புதிய தலைவராக விஜயேந்திரா எடியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜயேந்திரா எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார். அவரது தந்தையும் முன்னாள் முதல்வரான எடியூரப்பா, விஜயேந்திரா எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு விஜயேந்திரா எடியூரப்பா வெற்றி பெற்றார்.

கர்நாடகா பாஜக தலைவர் பதவியை கைப்பற்றுதில் அம்மாநில சீனியர் நிர்வாகிகளான ஷோபா கரன்ந்லாஜே, சி.டி.ரவி, சுனில் குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இந்தசூழலில் இளைஞரும் முதல்முறை சட்டமன்ற உறுப்பினருமான விஜயேந்திரா எடியூரப்பாவுக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில பாஜக எதிர்க்கட்சி தலைவரை இன்னும் நியமனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ: காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

டிடி பொதிகை பெயர் மாற்றம்: எல்.முருகன் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share