தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா இன்று (நவம்பர் 20) அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் எடுப்பதாகவும், போலி ரசீதுகள் தயாரிக்கப்படுவதாகவும் அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் வேலூர், கரூர், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட மணல் குவாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையானது நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவுக்கு சம்மன் அனுப்பினர்.
இதனை தொடர்ந்து முத்தையா இன்று காலை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் ஆஜரானார். அவரிடம் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளப்பட்டதா? பர்மிட் இல்லாத இடங்களில் மணல் எடுக்கப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் விசாரணை எப்போது?
Bigg Boss 7 Day 49: கைதட்டல் கேட்டு புலம்பிய பூர்ணிமா