wrd chief engineer muthiah second day ed office

ED அலுவலகத்தில் இரண்டாவது நாளாக முத்தையா ஆஜர்!

அரசியல்

தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் எடுக்கப்படுவதாகவும், போலி ரசீதுகள் பயன்படுத்தப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றது.

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனடிப்படையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முத்தையா நேற்று ஆஜரானார். அவரிடம் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் முத்தையா ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இளைஞர்கள் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: ஐசிஎம்ஆர்

Bigg Boss 7 Day 50: மீண்டும் களமிறங்கும் வைல்டு கார்டு போட்டியாளர்கள்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *