உலகத்தரத்தில் ஐடி பூங்கா : அமைச்சர் எ.வ.வேலுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

எல்காட் புதிய டைடல் பூங்கா அமைவதற்கு துணை நின்றவர் அமைச்சர் எ.வ.வேலு என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

கோவை இளைஞர்கள் மிகவும் எதிர்பார்த்த எல்காட் புதிய டைடல் பூங்காவை கடந்த 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

முதலில் இந்த ஐடி பூங்கா கட்டுமான பணி தாமதமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.


அதன்படி பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 5 ஆம் தேதி புதிய ஐடி பூங்கா திறக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை கள ஆய்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 7) தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.

அதில், அமைச்சர் எ.வ.வேலுவையும் பாராட்டியுள்ளார்.

“எல்காட் புதிய டைடல் பூங்காவின் கட்டமைப்பை உலகத் தரத்திற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான முறையில் அமைத்திடத் துணை நின்றவர் பொதுப்பணித் துறை அமைச்சரான எ.வ.வேலு. நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுடன் வேலுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

டைடல் பூங்காவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்கூட்டியே பதிவு செய்து, தங்கள் பணியினைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைகள் வழங்க ஆயத்தமாயிருக்கின்றன” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“செயல் புயலாக செந்தில் பாலாஜி” : கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம் குறித்து ஸ்டாலின்

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ – சூரனை வதம் செய்த முருகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share