பெண்களின் ஆடை : பாபா ராம்தேவின் புதிய சர்ச்சை!

அரசியல்

பெண்கள் எந்த ஆடையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், பாபா ராம் தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

பதஞ்சலி யோகா பீடமும் மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதியும் இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் தானேயின் ஹைலேண்ட் பகுதியில் ஏற்பாடு செய்தன.

இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார்.

நேற்று (நவம்பர் 25 ) நடந்த இந்த கூட்டத்தில் பாபா ராம்தேவ் பெண்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது பாபா ராம்தேவ் ”பெண்கள் புடவை , சல்வார் உடை என எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி மகளிர் ஆணையம் கண்டனம்

இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அவர் இன்று (நவம்பர் 26 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவி முன்னிலையில் பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் கூறியது அநாகரீகமானது, கண்டனத்துக்குரியது.

இந்த கருத்தால் அனைத்து பெண்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாபா ராம்தேவ் இந்த கருத்திற்கு நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! ” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டேவும் கலந்து கொண்டார்.

சஞ்சய் ராவத் கண்டனம்

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத்தும் இந்த விவகாரம் குறித்து கூறுகையில்,

‘ஏன் அம்ருதா ஃபட்னாவிஸ் அந்த யோகா நிகழ்ச்சியின் போது பாபா ராம் தேவ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

womens panel demands apology ramdev for his sexist remarks

“சிவாஜியை அவமதிக்கும் வகையில் கவர்னர் கருத்து கூறும்போதும், கர்நாடக முதல்வர் மகாராஷ்டிரா கிராமங்களை கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதாக மிரட்டும் போதும், தற்போது பாபா ராம்தேவ் பெண்களை இழிவுபடுத்தும்போதும் அரசு மவுனம் காக்கிறது.

அரசு டெல்லிக்கு நாக்கை அடகு வைத்து விட்டதா?” .என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

பாபா ராம் தேவ் விளக்கம்

இந்த சர்ச்சைகளை தொடர்ந்து தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்த பாபா ராம்தேவ் ‘இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் புடவைகளை கொண்டு வந்ததாகவும், ஆனால் பின் தொடர் நிகழ்வுகளால் அவற்றை அணிய நேரம் கிடைக்கவில்லை.

இதை பற்றி பேசும் போது தான் “நீங்கள் புடவையில் அழகாக இருப்பீர்கள், அம்ருதா ஜி போன்று சல்வார் உடையில் அழகாக இருப்பீர்கள், என்னைப் போல எதுவும் அணியாமல் இருக்கும் போதும் அழகாக இருப்பீர்கள் என்றேன்” என கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உலகளவில் அதிகம் தேடப்பட்ட நடிகை!

“தவறு செய்தால் காப்பாற்றமாட்டோம்”: அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *