பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கியது. அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 19-ஆம் தேதி மக்களவையில் 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்ல்வால் தாக்கல் செய்தார்.
33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவை வரவேற்ற எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் வரை காத்திருக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
மக்களவையில் 454 எம்.பி-க்கள் ஆதரவாகவும் 2 எம்.பிக்கள் எதிராகவும் மகளிர் 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவுக்கு வாக்களித்தனர். மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. இதனை தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையை பெற்றுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பெண் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் இந்த தருணத்தில் பெண் எம்.பிக்களை சந்திக்கும் பெருமை கிடைத்தது. மசோதாவை நிறைவேறியதை கொண்டாடுவதற்கு ஒன்று கூடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் இந்தியா பிரகாசமான எதிர்காலத்தின் உச்சத்தில் நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை முட்டை பொரியல்
குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்!
இணைந்து செயல்பட வேண்டும்: இந்தியாவிற்கு கனடா பிரதமர் அழைப்பு!
ரொம்பவே சந்தோசப்படாதிங்க மக்கா, அது அமலுக்கு எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது.,