10 ஆண்டுகளாக இந்த பக்கமே வரவில்லை, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று வாக்குவாதம் செய்த பெண்ணிடம் நான் சொல்றத கேளுமா என்று கை எடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து நழுவினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு அசோகபுரம் பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டியபடி வீதி வீதியாக சென்றார்.
அப்போது அங்கு நின்றிருந்த பெண் ஒருவரிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இரட்டை இலைக்கு தான் ஒவ்வொரு முறையும் வாக்களிக்கிறோம். இந்த பக்கமே நீங்கள் வருவதில்லை.
எந்த பணியும் செய்வதில்லை நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றோம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்த பெண் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்த தென்னரசு முயன்றார்.
கவுன்சிலர் மட்டும்தான் இந்த பகுதிக்கு வருவார் எம்எல்ஏ எப்படி வர முடியும் என்று கூறி அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்தார்.
ஆனால் சமாதானம் அடையாத பெண் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கடைசியாக நான் சொல்றத கேளுமா, ஆள விடுமா என்று இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி அங்கிருந்து தென்னரசு புறப்பட்டார்.
கலை.ரா
நாகையில் ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர்: மீனவர்கள் அதிர்ச்சி!
”வேலன்டைன்ஸ் டே” கொண்டாடும் கூகுள்