யெச்சூரி விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 19ஆம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
72 வயதான சீதாராம் யெச்சூரிக்கு சுவாசக் குழாய் தொற்று காரணமாக. பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சையில் உள்ள யெச்சூரி கவலைக்கிடமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
யெச்சூரி விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Deeply concerned to hear about Comrade @SitaramYechury’s health. Wishing him a speedy recovery and hoping the dedicated efforts of the medical team will help him regain strength soon. https://t.co/YDt3PClHdG
— M.K.Stalin (@mkstalin) September 10, 2024
அந்தவகையில், அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் யெச்சூரி விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், “தோழரின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்டு மிகுந்த கவலையடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பான முயற்சிகள் யெச்சூரி விரைவில் வலிமை பெற உதவும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
எனக்கு இட்ட கட்டளை… பள்ளியில் பேச அழைத்தவர்… மகா விஷ்ணு தந்த வாக்குமூலம்!
திமுக கூட்டணியில் பிளவா? – அமைச்சர்கள் பதில்… திருமா விளக்கம்!