நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று தொடக்கம்!

அரசியல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இன்று (டிசம்பர் 7) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 7) தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின்போது மத்திய அரசு 17 அமா்வுகளை நடத்தவுள்ளது. மேலும், 16 மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களுக்கிடையேயான கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, சுதந்திரத்துக்கு முன்பு ஆளுநா்களால் வழங்கப்பட்ட நிலங்களின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்கான மசோதா,

நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில், வனமல்லாத பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களிலும் மரம் வளா்ப்பை ஊக்குவிப்பதற்காக வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா,

கடலோர மீன் வளா்ப்பை முறைப்படுத்தும் நோக்கில் கடலோர மீன் வளா்ப்பு ஆணைய திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, கொலீஜியம் தொடர்பாக மத்திய அரசு – உச்ச நீதிமன்றம் இடையிலான சமீபத்திய மோதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தொடரில் இமாச்சல் மற்றும் குஜராத் சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் முடிவுகள் (நாளை எண்ணப்படுகிறது) தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், அத்தோ்தல்களில் வெற்றி பெறும் கட்சி, போட்டி கட்சிகளின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் முடக்குவதற்கு முயலும் எனச் சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், கேரள வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தில் உள்ளதால் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

பிரதமர் அண்ணாமலை: போகிற போக்கில் சூர்யா சிவா போட்ட போடு!

கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் சுக்கா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.