அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி பதிவு செய்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் முடிவின் மூலம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளர் என்ற வகையில் இரட்டை இலை சின்னமும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் கையெழுத்து இடும் அதிகாரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்திருக்கிறது.
நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஜெய்தேவ் லாகிரி ஏப்ரல் 20 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 13ஆம் தேதி நீங்கள் (எடப்பாடி பழனிச்சாமி) தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதங்கள்,
மார்ச் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு,
பிப்ரவரி 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்… உங்களுக்கு ஒரு தகவலை அனுப்புவதற்கு நான் அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன்.
அதாவது உங்கள் கட்சியின் சட்ட விதிகளில் செய்த திருத்தங்கள் மற்றும் நிர்வாகிகள் மாற்றம் பற்றிய உங்களது கடிதங்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
அதே நேரம் இந்த பதிவு இனிவரும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டவையாக இருக்கும்” என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய இரு வகைகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை உறுதி செய்துகொண்டுவிட்டார்.
–வேந்தன்
உதயநிதி, சபரீசன் பற்றி பிடிஆர் குரலில் பரவும் ஆடியோ புயல்!
தமிழ்நாட்டுக்கே இன்று தீபாவளி தான்: எஸ்.பி.வேலுமணி