அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் பின்பற்றாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியிருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது வில்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றாமல் செந்தில் பாலாஜியை ஆளுநர் ரவி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். முதல்வர் அறிவுறுத்தலின்படி ஆளுநர் செயல்படவில்லை என்றால் அவர் எடுக்கும் முடிவுகள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்துக்களை பின்பற்றாமல் தன்னிச்சையாக செந்தில் பாலாஜி அமைச்சராக முடியாது என்று ஆளுநர் ரவி எப்படி கூற முடியும். ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரம் கிடையாது. நாளை நீதிபதியை நீக்குகிறேன் என்று ஆளுநர் கூறுவார். தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஆளுநரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம்” என்று கூறினார்.
செல்வம்
“ஆளுநர் கடிதத்தை நிராகரிக்கிறோம்” – தங்கம் தென்னரசு
“நான்கு மணி நேரத்தில் அதிகாரத்தை உணர்ந்த ஆளுநர்” – அப்பாவு
Comments are closed.