‘மோடியும், அமித் ஷாவும் இந்த நாட்டை இயக்குவதை மக்கள் விரும்பவில்லை’ என்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 6 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கூட்டாக இன்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ராகுல்காந்தி பேசுகையில், “இந்த தேர்தலில் கட்சியின் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதாகவும், இந்தியா கூட்டணி நாட்டிற்கு ஏழைகளுக்கு ஆதரவான பார்வையை வழங்கவும் போராடியது.
அரசியலமைப்பை காப்பாற்றுவதே எங்களது போராட்டம். அரசியல் சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. இன்று மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தை காக்க உதவியிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தியாவை இயக்குவதை நாட்டு மக்கள் விரும்பவில்லை. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை.
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை மீறி, இந்தி பெல்ட் மற்றும் தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றியை 300க்கு கீழ் கொண்டு வர இந்திய கூட்டணி ஒரு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பேசினார்.
ஜே.டி.யு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியா?
வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ஜே.டி.யு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது குறித்து ராகுல் பேசுகையில், “இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நாளை ஒரு சந்திப்பை நடத்த உள்ளோம். அப்போது கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்” என்றார்.
தொடர்ந்து வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் தன்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல், “நான் இரண்டு இடங்களிலும் இருக்க முடியாது. அதுகுறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வாக்கு எண்ணிக்கையில் தாமதம் : தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்!
நாடாளுமன்றத் தேர்தல் : கர்நாடகாவில் பாஜக முன்னிலை!
Игрок, который преднамеренно избегает попадания на блайнды, https://bellydancephotography.com/ будет подвергнут штрафу.